காற்றுள்ள போதே தூற்றிக்கொள்..

வானூர்தி மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையினருக்கான பயிற்சிக்காக, தமிழகத்தில் உள்ள Aerospace / Aeronautical Engineering பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டி இணையத்தில் தேடி, அந்த கல்லூரிகளின் இணையதளத்துக்கு சென்று, அதில் அளிக்கப்பட்டுள்ள மின்னஞ்சல்களை சேகரித்து அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினோம்.

ஆனால்.. 60 % மின்னஞ்சல்கள் முகவரிகள் இயங்கவில்லை அல்லது காலாவதியாகி கிடந்தது.

இது தரும் ஏமாற்றம் ஒரு புறம் இருக்க.. சமீபத்தில் வெளியான போயிங் நிறுவனத்தின் ஆய்வரிக்கையின் படி.. அடுத்த 20 ஆண்டுகளில் 8 லட்சம் விமான பொறியாளர்கள் தேவை. அதிலும் ஆசிய பிராந்தியத்தில் 2,66,000 விமான பொறியாளர்கள் விமானங்களை பழுது பார்க்கும் பணிக்கு தேவை.

(Source : https://www.mro-network.com/maintenance-repair-overhaul/boeing-nearly-800000-new-mechanics-needed-2039)

இவற்றில் எத்தனை பணியிடங்களுக்கு நம் இந்திய, தமிழக பொறியாளர்களை நாம் தயார்படுத்த உள்ளோம் ? அவர்களுக்கு என்ன மாதிரியான தரத்தில், நவீன தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்கப்போகிறோம் ?

#skillindia #reskill #upskill #neoskill என கொள்கை முடிவுகள், திட்டங்களை தாண்டி.. அதிவேக பாய்ச்சல் அனைத்து மட்டங்களிலும் தேவை.

அடுத்த இருபது ஆண்டுகளில் 20000 விமானங்கள் தேவைப்படு ஆசிய பிராந்தியத்தில், அதிலும் குறிப்பாக 4000 விமானங்கள் தேவைப்படும் இந்தியாவில் அதனை தயாரிக்கும் திறனுள்ள நிறுவனங்களோ, அந்த நிறுவங்களில் வேலை செய்யும் திறனுள்ள பணியாளர்களையோ நாம் இப்போது முன்னிலும் அதிக உத்வேகத்துடன் தயார் செய்ய வேண்டும்.

(Source : https://www.boeing.com/commercial/market/commercial-market-outlook/

https://boeing.mediaroom.com/2019-06-17-Boeing-Forecasts-8-7-Trillion-Aerospace-and-Defense-Market-through-2028)

சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் விமானம் மற்றும் இராணுவ தளவாட துறை தொடர்பான அறிவிப்பு, விமான பழுது மற்றும் பராமரிப்புத் துறைக்கான ஆக்கங்கள், இராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் (தமிழகம் மற்றும் உத்திர பிரதேசம்) என தொடர்ச்சியான திட்டங்களை முன்னெடுக்க.. செயலாக்க இவை அவசியம்.

கல்வி நிறுவங்கள், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் என அனைவரும் இனைந்து செயலாற்றவேண்டிய காலமிது.